செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடி பராமரிப்பில் உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். நெல்லிக்  காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
 
* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக ‘மசாஜ்’ செய்யவும். மயிர்க்கால்கள்  வலுப்பெற சரியான வழி இது.
 
* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம்  ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.
 
* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது. சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும்.  வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.
 
* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
 
* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
 
* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு,  புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும்  வளரும்.
 
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய  பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.