வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!
வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாகும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர். ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது.
வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும் நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது. ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும். குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க, அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலக்கி அல்லது நெய்யில் வறுத்து கொடுக்கலாம்.
வெங்காயத்தில் உள்ள சல்பர், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, மாரடைப்பை தடுக்கிறது. இதன் அண்டிமைக்ரோபியல் தன்மை செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது. பைட்டோகெமிக்கல்கள் அல்சரை தடுக்க, கரையும் நார் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனுள்ளதாகும்.
Edited by Mahendran