1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வில்வ இலையின் மருத்துவ பயன்பாடுகள் என்ன...?

வில்வ இலையை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனை சிவனுக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்கள். எனினும், இந்த வில்வ இலைகள் பல மருத்துவகுணங்கள் கொண்டது. இது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றது.

இந்த இலைகளை உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இந்த வில்வ இலை கோவில்களில் எளிதாக கிடைக்கும். எனினும், வில்வ பொடி நாட்டு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கும்.
 
இந்த இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது இருமல், சளி மற்றும் சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
 
குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றை போக்க இந்த வில்வ இலைகளை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க  இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றது.
 
வில்வ இலையில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. மேலும் இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். இது உடலில் இருக்கும் நச்சுகளை 
 
வில்வ இலை இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். இது உடலுக்கு அமைதியான உணர்வை தரும். மேலும் இவை தலைவலிக்கு இது ஒரு ஏற்ற மருந்தாக உள்ளது.
 
வில்வ இலையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், மல சிக்கல், வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் குணமடைய இது உதவும்
 
வில்வத்தில் தைராய்டு சுரபி சீராக சுரக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளது அதனால் தைராய்டு சீராக செயல்படுகின்றது. நீரழிவு நோய் இருப்பவர்கள் வில்வ இலைகளை பயன்படுத்துவதால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருக்க உதவும்.