வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல சில மருத்துவ குறிப்புகள்...!!

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இதனை கவனத்தில் கொள்ளவில்லையென்றால் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது. 


நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து, மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட  நோய்கள் அகலும்.
 
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண்  பார்வை குறைபாடு நீங்கும்.
 
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து குழைவான பதத்தில் இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி  விடவும். இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.
 
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
 
கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது. மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப்  பயன்படுத்தலாம்.
 
மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால்சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.