1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Some home remedies that are useful for diseases !!

நோய்களுக்கு பயன்தரும் சில வீட்டு வைத்திய குறிப்புகள் !!

பயன்கள்
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், தலைமுடியை முறையாக பராமரிக்காததாலும் சிலருக்கு பொடுகு தொல்லை ஏற்படுகிறது.


கிரீன் டீயில்  சிறிதளவு தேன் கலந்து தினமும் பருகி வருபவர்களுக்கு பொடுகு தொல்லை கூடிய விரைவில் நீங்கும். தலைமுடியின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கும்.
 
சர்க்கரை நோய் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும். ஏனெனில் தேன் இரத்த சர்க்கரை அளவை  குறைக்க உதவும்.
 
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
 
தேன் மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில்  இருந்து நிவாரணம் கிடைக்கும்
 
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சமஅளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
 
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
 
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு  முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
 
பெரும் சீரக பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
முகத்திற்கு ஆவி பிடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?