திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குடல்புண் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பச்சை வாழைப்பழம்...!!

பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் ‘அல்சர்’ ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு maருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாகி உள்ளதால், இது இரத்தத்தில்  சர்க்கரை அளவை கட்டுப்படுத்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
 
இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பலனளிக்காது.
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பலத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.
 
இரத்தம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பச்சை வாழைப்பழத்தில், இரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.
 
பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.