1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் உள்ளுறுப்புகளை சீராக்கும் நெல்லிச்சாறு !!

நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.
 
நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும். நெல்லிச்சாறில் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.
 
நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும். நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும். 
 
நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும். நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.