புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சோளம் !!

மக்காசோளம் தான் நம்மில் பெரும்பாலனவர்கள் சாப்பிட்டிருப்போம். ஆனால் வெள்ளை சோளம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. வெள்ளை சோளத்தில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றது என்பதை பார்ப்போம்.

வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகபடியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகவும், கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். மாரடைப்பு வராமல் வெள்ளை சோளம் இதயத்தை பாதுகாக்கின்றது.
 
வெள்ளை சோளத்தில் நார் சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. உடல் எடை அதிகம் ஏராமல் பாதுகாக்கின்றது.
 
வெள்ளை சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றது. வெள்ளை சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலு பெறுவதுடன் தேய்மானம் சரிசெய்யப்படுகின்றது.
 
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது.
 
சோளத்தில் அதிகமான நார்சத்தும் மற்றும் மாவுசத்தும் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதிலிருக்கும் நார் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
 
வெள்ளை சோளத்தில் தேவையான மினலர்ஸ், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளதால் உடல் சுழற்சி முறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை தானாக சரிசெய்கின்றது. உடலுக்கு தேவையான புத்துணர்சியை தந்து உடலை வலுபெற செய்கின்றது.
 
வெள்ளை சோளத்தில் போதுமான அளவு  நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.