வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்திற்கு எந்தவித தீங்கும் ஏற்படுத்தாத தேங்காய் எண்ணெய் !!

தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் கண்களில் செய்யப்படும்  ஒப்பனைகளை நீக்கவும் செயல்படுகிறது. இது சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை.

தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிடமிருந்து, உதடுகளைப் பாதுகாக்கிறது. இது உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
 
தேங்காய் எண்ணெய் கல்லீரலை, ஆல்கஹால் உட்கொள்வதினால் உண்டாகும் பக்க விளைவுகளிலிருந்தும், தேவையற்றக் கொழுப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்கிறது. 
 
தேங்காய் எண்ணெய் மூட்டு வீக்கம் மற்றும் கீல்வாதத்தினால்  உண்டாகும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் மூட்டு வலியைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
 
பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நன்மை  பயக்கிறது. தேங்காய் எண்ணெய்யுடன் மசாஜ் செய்வதன் மூலம், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த இயலும்.
 
பெரும்பாலும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது, நீரிழிவு மற்றும் இதயம்  தொடர்பான நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. உடல் பருமனான மக்கள் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும். பெண்கள், தங்கள் உடலில் அதிகரிக்கும் கலோரிகளைக் குறைக்க, தினசரி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
தேங்காய் எண்ணெய்யில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை தொற்றுநோய்களைக் குறைக்க உதவுகின்றன. தேங்காய் எண்ணெய் குடல் புழுக்களை நீக்குகிறது. சில வகைத் தொற்றுகளைத் தடுக்க தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக அமைகிறது.
 
தேங்காய் எண்ணெய் மூளைக்கு நன்மை பயக்கிறது. இது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதிகமாக வியர்வை  சுரக்கும் மக்கள், தங்களின் சருமத்தில் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும். இது ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குகிறது. தேங்காய் எண்ணெய்யில் எந்தவித வேதிப்பொருள்களுமில்லை, இது இயற்கை பண்புகளை மட்டுமே கொண்டுள்ளது.