1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Sathukkudi to cure body water deficiency...!!

உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் சாத்துக்குடி !!

Sathukudi
உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸினை அடிக்கடி எடுத்துக்கொண்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்வுடன் காணப்படும்.


நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடி பழத்தினை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகிவிடும். உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய அடிக்கடி சாத்துக்குடி பழ ஜூஸினை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.

மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது. சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும்.

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது.
சாத்துக்குடி ஜீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது.

சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல் தடுக்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது. சாத்துக்குடிப் பழச்சாற்றைத் தலையில் தேய்த்து குளித்துவந்தால் மென்மையானக் கூந்தலைப் பெறமுடியும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
எளிதாக கிடைக்கும் கீரைகளில் நிறைந்துள்ள சத்துக்கள் !!