வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 30 மே 2022 (14:18 IST)

உடலின் தாமிர சத்தின் குறைப்பாட்டை சரிசெய்யுமா சப்போட்டா பழம் !!

Sapota
வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்ய இது சரியான தேர்வாகும்.


சப்போட்டா பழம் நன்மைகள் அதிலுள்ள வைட்டமின்கள் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அடங்கியுள்ளன. அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

இரைப்பை அழற்சி மற்றும் பிற குடல் தொடர்பான கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இதில் உள்ள நார்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.

சப்போட்டா பழத்தின் நன்மைகள் அதிலுள்ள ஊட்டச்சத்துக்களில் அடங்கியுள்ளன. சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற தாது சத்துக்கள் எலும்பை வலுப்படுத்த உதவுகின்றன.

தினமும் சப்போட்டா பழம் சாப்பிடுவது எலும்பின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் தாமிர சத்தின் குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சப்போட்டா பழத்தில் உள்ள தாமிர சத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.