ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (16:08 IST)

பல ஆரோக்கிய மருத்துவ குணங்களை கொண்டுள்ள ரம்பை இலை !!

Ramba leaves
ரம்பை இலை பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலை வகைகள்.


கறிவேப்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான் சாப்பிட வேண்டும்.

மிகமுக்கியமாக இது ஒரு நறுமண பொருள். இறைச்சியில் சேர்க்கும் பொழுது ஒரு அற்புதமான மணத்தையும் கொடுத்து இறைச்சியை மிகவும் மென்மையாக மாற்றிவிடும்.

ரம்பை இலை ஒரு தனித்தன்மையான மணத்தை கொடுக்கக்கூடியது. இது உடலில் ஏற்பட கூடிய உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது. தலையில் ஏற்படக்கூடிய பொடுகை குறைக்கக்கூடியது.

இந்த அன்னப்பூர்னா இலைகளை "கிழக்கின் வெண்ணிலா" என்றும் அழைக்கின்றனர். இந்த இலைகள் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த இலைகளில் இயற்கையாகவே நறுமணம் மற்றும் சுவை இருப்பதால் இவை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.