திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (10:57 IST)

சில உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது ஏன்...?

Fridge
சில உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது. குறிப்பாக தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது.


ஆப்பிள் பழங்களை பிரிட்ஜில் வைப்பதைவிட வெப்பமான இடத்தில் வைத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். மேலும் அவை 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கை பிரிட்ஜுக்குள் வைப்பதால் அதில் இருக்கும் மாவுச்சத்து குறைந்துவிடும். சுவையும் குறைந்துபோய்விடும். எனவே உருளைக்கிழங்கை உலர்ந்த இடத்தில் வைப்பதுதான் நல்லது.

வெஙகாயம் மற்றும் பூண்டுகளை வெளியே காற்றோட்டமாக வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

சாக்லெட்டை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதால் அதன் சுவை மாறுபடலாம்.

வாழைப்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் இயற்கையாக பழுக்கும் செயல்முறை பாதிப்புக்குள்ளாகும். வாழைப்பழத்தை அறை வெப்பநிலையில் வைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சீராக இருக்கும்.

சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது ஆரஞ்சு. கடினமான தோல் கொண்ட ஆரஞ்சுக்கு வெப்பமான சூழல்தான் ஏற்றது.