செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (13:47 IST)

காலிப்ளவரை தொடர்ந்து சாப்பிடுதால் கிடைக்கும் பயன்கள் !!

காலிபிளவரில் மட்டுமல்லாமல் அதில் உள்ள இலையிலும் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு மிக சிறந்த உணவாகும். சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.


காலிப்ளவரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பு குறையும். நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய பல்வேறு சத்துக்கள் காலிப்ளவரில் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகாக்கிறது. வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடல் பகுதிகளை சுத்திகரிக்கிறது.

காலிப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காலிப்ளவரை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இது சூட்டை தணித்து மூலத்தை கட்டுபடுத்துகிறது.