1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Remove the unwanted hair that grows on the face Some natural Methods

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற சில இயற்கை வழிமுறைகள்

முகம்
சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற அழகு நிலையம் சென்று வேக்ஸிங் செய்து கொள்வதை பல பெண்கள்  வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு சென்று பணத்தை வீணடிக்காமல் சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே  இதிலிருந்து விடுபட முடியும். மேலும் இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம், சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும்  வராது.

 
முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சல் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளே பிரதான மருந்துப் பொருளாக பயன்படுகிறது. முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு  பெறும்.
 
கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து  வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள  உதவியாக இருக்கும்.
 
மஞ்சளை பப்பாளி அல்லது கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
 
கடலை மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.
 
வாரத்திற்கு இரண்டு முறை சர்க்கரையை தேனில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், முடியின்  வளர்ச்சி தடைபடும்.
 
வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும்  முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான மற்றும் பட்டுப் போன்ற சருமத்தைப்  பெறலாம்.
 
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சுவையான அரிசி முறுக்கு செய்ய...!