செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (11:32 IST)

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமார் மகள்

சரத்குமாரின் இன்னொரு மகளான பூஜாவும் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

 
 
சரத்குமார் மகளான வரலட்சுமி சரத்குமார், தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது லிங்குசாமி  இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் வில்லியாக நடிக்கிறார். இந்நிலையில், சரத்குமாரின் இன்னொரு  மகளான பூஜா சரத்குமாரும் கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். ஆனால், நடிகையாக அல்ல… காஸ்ட்யூம் டிசைனராக.
 
மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி, பெண்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குகிறார். ‘ஷக்தி’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், வரலட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் காஸ்ட்யூம் டிசைனராக  அறிமுகமாகிறார் பூஜா.
 
“பூஜாவுக்கு டிரெஸ் பற்றி நுட்பமான அறிவு உண்டு. நான் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதெல்லாம், அவள் தான் என் டிரெஸ் விஷயத்தை கவனித்துக் கொள்வாள். எனவே, அதையே அவளுடைய வேலையாக ஆக்கலாம் என முடிவு செய்தோம். இந்தப்  படத்தில் ஏகப்பட்ட பெண்கள் இருப்பதால், அவள் அறிமுகத்துக்கு இதுவே சிறந்த படமாக இருக்கும். அத்துடன், அவளுக்கு நான் உதவியாகவும் இருக்க முடியும்” என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.