எளிமையான வழியில் உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்...!!

கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்தான கால்சியம் பெக்டேட் உள்ளது. இந்த நார்ச்சத்து உடல்  எடையை குறைக்க உதவிப் புரியும். ஆகவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் வயிறு நிரம்புவதோடு,  உடல் எடை அதிகரிக்காமல் குறைய ஆரம்பிக்கும்.
வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவும். ஆகவே எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்வதோடு, உடல்  பருமன் அதிகரிக்காமலும் தடுக்கும்.
 
தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத்  தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத்  தருகிறது.
 
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர,  உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும். தக்காளி இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளும். 
 
வெள்ளரிக்காயில் பல்வேறு நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும் பீட்டா-கரோட்டீன் மற்றும் இதர கரோட்டினாய்டுகள் உள்ளது. முக்கியமாக தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோயின் தாக்கத்தைத் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யும்.
 
உடல் எடையைக் குறைக்க வெறும் உணவுகள் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் அவசியம். தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
 
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :