செரிமானத்தை மேம்படுத்த உதவும் முள்ளங்கி !!
முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் வெப்பநிலையை குறைக்கப் பயன்படுகிறது. முள்ளங்கி தலைவலிக்கு பயனுள்ளதாக அமைகிறது.
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
தலை முடியை வலுவானதாக மாற்ற முள்ளங்கி சாப்பிட வேண்டும். முள்ளங்கி சாறு முடி உதிர்தலைக் குறைக்க பயனுள்ளதாக அமைகிறது. முள்ளங்கி சாற்றைக் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த, செயல்முறையை வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் கூந்தலின் வேர்களை பலப்படுத்த இயலும்.
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி தொற்றுநோயைக் குறைக்கிறது. மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கி இலைகளை உட்கொள்ள வேண்டும். இது நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மஞ்சள் காமாலை நாள்பட்ட காய்ச்சலால் ஏற்படுகிறது. முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி தொற்றுநோயைக் குறைக்கிறது. மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
முள்ளங்கி விதைகளில் தயிரை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இதனை, சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க இயலும். இந்த பேஸ்டை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை குறைக்க முடிகிறது. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பராமரிக்க முதன்மையாக பயன்படுகின்றன.
முள்ளங்கியிலுள்ள நார்ச்சத்துகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மேலும், செரிமானத்தை மேம்படுத்துகின்றன.