1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:48 IST)

நிமோனியா நோய்: அறிகுறிகள் மற்றும் கைவைத்தியம்..!

நிமோனியா அறிகுறிகளை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். இது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
நிமோனியா மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நுரையீரல் தொற்று நோய். இருமல், முச்சுத்திணறல், காய்ச்சல், மூச்சு வாங்குதல், அசதி, வாந்தி, சுவாசிக்கும் பொழுதும் இருமும் பொழுதும் நெஞ்சு வலி, பசியின்மை, மலச்சிக்கல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும். 
 
நிமோனியா அறிகுறிகளை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை பின்வருமாறு... 
 
பூண்டு: பூண்டை நசுக்கி நெஞ்சில் தடவலாம், அல்லது தினமும் ஒருமுறை பூண்டை அப்படியே சாப்பிடலாம்.
 
மஞ்சள்: மூச்சுத் திணறலை குறைக்கவும், நெஞ்சிலிருந்து சலியை வெளியேற்றவும் மஞ்சள் உதவும். சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
 
தேன்: இருமலை குறைக்க தேன் உதவும். நிமோனியா அறிகுறிகள் குறையும் வரை தினமும் நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.
 
கற்பூர எண்ணெய்: நல்லெண்ணெய் உடன் மூன்று டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து உறங்கும் முன் நெஞ்சில் தடவிக் கொள்ளலாம்.
 
ஆப்பிள்:  நுரையீரலில் வீக்கத்தை குறைக்க ஆப்பிள் உதவும். தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து செய்து குடிக்கலாம்.
 
சிட்ரஸ் பழங்கள்: கமலாப்பழம், பெர்ரி பழங்கள், கிவி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 
 
காய்கறி, கீரை ஜூஸ்: கீரை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் ஜூஸ் நிமோனியாவை குணப்படுத்த உதவும்.