ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்குமா பப்பாளி !!

பப்பாளியில் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது. சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனுடைய  விளையும் மலிவானது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நிறம் கொண்டது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம். 

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
 
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 
பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
 
பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.
 
பப்பாளிபழம்  சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.
 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது. எனவே பெண்கள் பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.