1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (18:02 IST)

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம் !!

மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது.


உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

சிறுநீர்தாரையில் எரிச்சல், கண்களில் எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது.

வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது. கொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல்நோய்களை குணப்படுத்தவல்லது. மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் தீரும்.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.