எளிதில் கிடைக்கும் முருங்கைப்பூவில் உள்ள ஏராளமான நன்மைகள் !!
பாலை நன்றாக காய்ச்சி அதில் முருங்கை பூவை அதில் போட்டு நாட்டு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து கலக்கி தினமும் மாலை வேளை சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும்.
ஒரு ஸ்பூன் முருங்கைப் பூ பொடியை தேனில் குழைத்து தினமும் ஒருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
முருங்கைப் பூவை வேகவைத்து அதனுடன் துவரம்பருப்பு, சிறிதளவு தேங்காய், பச்சை மிளகாய் போட்டு கடையல் செய்து சாப்பிட்டு வர விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை பருப்புடன் சேர்த்து அரைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏற்படும் வெண்படலமும் குணமாகும். பார்வை கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை காயவைத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து தினமும் காலை வேளையில் 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். மேலும் உடல் வலிமையாகும். நீரிழிவு நோயாளிகள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
முருங்கைப் பூ பொடியை 100 மிலி பாலில் கலந்து அதில் சிறிது பாதம் பருப்பு பொடியை சேர்த்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர விந்து முந்துதல் பிரச்சனை தீரும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.