செவ்வாய், 2 ஜூலை 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:10 IST)

மருத்துவகுணம் கொண்ட முருங்கை பிசினின் பயன்கள் என்ன...?

முருங்கை மரம்  தரக்கூடிய அத்தனை பொருட்களும் மருத்துவகுணம் கொண்டது. முருங்கை மரம் வீட்டில் இருந்தால், அந்த வீட்டில்  உள்ளவர்கள் அனைத்துவிதமான சத்துக்களையும் பெறுவார்கள் என்று சொல்லலாம்.


முருங்கை பிசின் என்பது  முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் கருஞ்சிவப்பு நிறமான பொருள். இதில் கால்சியம், சுண்ணாம்பு சத்து உள்ளது.  இது உடலை வலுப்படுத்தவும் கட்டுக்கோப்பாக வைக்கவும்  பயன்படுகிறது.

உங்களுக்கு எவ்வளவு ஜெல்லி தேவைப்படுமோ அந்த அளவிற்கு நீரை ஊற்றி அதில் தேவையான அளவு முருங்கைப் பிசினைப் போட்டுக் கொள்ளவும்.ஒரு நாள் இரவு முழுவதும் முருங்கைப் பிசினை நீரில் ஊற விடவும்.

பிறகு அதை எடுத்து ஊறிய பிசின்களை நீரில் நன்றாக உடைத்து நீரைக் கலக்கி விடவும். இந்த நீருடன் சேர்ந்த ஜெல்லியை இளஞ்சூடான நாட்டுப்பசு பாலுடன் கலந்து பருகவும். இவ்வாறு ஊறவைத்த முருங்கைப் பிசின் ஆனது ஒரு இயற்கையான ஜெல்லி சுவைக்கு மாறிவிடும். இயற்கை நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம்.

இவ்வாறு இதை அடிக்கடி பருகி வந்தால் மூட்டு வலி, ஜவ்வு தேய்மானம்,ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தை பேரு பெற விரும்புவோர் தம்பதியர்கள், மாதவிடாய் வலி, ஆண்களுக்கு உயிரணுக்கள் அதிகரிக்க செய்யவும் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யவும் மற்றும் பெண்களுக்கு கருமுட்டை சார்ந்த பிரச்சனைகளை, நாட்பட்ட நோய்கள் இருப்பவர்கள் உடல் பலம் பெறவும், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீக்கவும், நாட்பட்ட தலைவலி   போன்ற நோய்களை தீர்க்கும்.