1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (10:07 IST)

நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவும் பிஸ்தா !!

Pista
வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், பிஸ்தா பருப்பு ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தையும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பராமரிக்க உதவுகிறது.


பிஸ்தாவில் வைட்டமின் ஈ, பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதப் படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அகற்றறுவதன் மூலம் இளமையோடு வைத்திருக்க உதவுகின்றன.

பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மலச்சிக்கலை தடுப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு ஹீமோகுளோபின் அவசியமாகும். பிஸ்தாவில் வைட்டமின் பி6 இருப்பதால், உடலில் ஹீமோகுளோபின் சிறப்பாகவும் வேகமாகவும் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகின்றன. இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இது நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானதாகும்.

பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் E சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது.