1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (14:44 IST)

வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள நெல்லிக்காய் !!

Gooseberry 1
நெல்லிக்காயில் வைட்டமின் C சத்து அதிக அளவில் உள்ளது. அறுசுவையில் நெல்லிக்காயில் உப்பு சுவையை தவிர மற்ற சுவைகள் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளது.


நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுகள் அதிகம் இருப்பதால் இரத்த சோகைக்கு மருந்தாக பயன்படுகிறது.

சிலருக்கு உடலில் பித்தம் அதிகரிப்பதால் மயக்கம், தலைசுற்றல், உடல் சூடு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும். அவர்களுக்கு 2 தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு மற்றும் தேனை 100 மி.லி நீரில் கலந்து சாப்பிட்டால் உடலில் பித்தத்தை சீராக்குகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தால் எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தி எலும்புகளை வலுவடைய செய்கிறது. இதனால் எலும்பு சிதைவு நோய்க்கு நல்ல பலனை தருகிறது.

இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் 100 மி.லி சுடுநீரில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். மற்றும் தோலில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை கொடுக்கும்.