திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:47 IST)

அஜீரண கோளாறுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி !!

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.


கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது, உடலில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இன்சுலின் சுரப்பு சீராக இருந்தால் தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும். வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு கொத்தமல்லி மருந்தாகப் பயன்படும்.

நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். பசியைத் தூண்டும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு. இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். கொத்தமல்லி சாறு கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.