வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:17 IST)

மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உறுதுணையாகும் பப்பாளி !!

Papaya
பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.


பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.

இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு தீங்கு தரும் நோய் காரணிகளை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது.

பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது. தோல் பளபளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம்.

பப்பாளியில் போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி வழங்கும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

புத்துணர்ச்சி மிக்க பப்பாளியில், அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. உடற்செல்கள் மற்றும் சருமம் பளபளப்புத் தன்மையுடன் விளங்க பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் இது உதவி புரிகிறது.