1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (07:39 IST)

செரிமானம் நன்கு நடைபெற உதவும் சாத்துக்குடி ஜூஸ் !!

Sathukudi
அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது.


சாத்துக்குடி குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேலும் சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும்.

தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, உடலை நோய்த்தொற்றுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக சாத்துக்குடியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. சாத்துக்குடி ஜூஸ், குடலின் இயக்கத்தை அதிகரித்து, நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்யும்.

சாத்துக்குடியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமான அளவில் இருப்பதால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.