செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:16 IST)

உடல் உபாதைகளை நீக்கி உணவு செரிமானத்திற்கு உதவும் சீரகம் !!

சீரகம் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்ள உதவுகிறது.பிரசவித்த இளம் தாய்மார்களுக்கு இனப்பெருக்க உறுப்புகள் சுத்தப் படுவதற்கும் தாய்ப் பால் சுரப்பதற்கும் முக்கியமாக உதவுகிறது.


சமைக்கும் போது ஜீரகத்தைப் பயன்படுத்துங்கள்; அது நுண்ணிய சத்துக்கள் உட்கிரகிக்கப் படுவதற்கு உதவுகிறது. சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும்.

தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பயன்பாட்டு முறை- வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும்.

சீரகம் நினைவாற்றலை அதிகரிப்பதில் மிகவும் நன்மை பயக்கும். சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில்1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் அது பல உடல் உபாதைகளை நீக்குகிறது.

சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது.