வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க உதவும் ஓமம் !!

செரிமானத்தை சீராக்குவதில் இருந்து பல் மற்றும் காது வலிகளை சரி செய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லையெனில் ஓமத்திணை நீரில் நன்றாக ஊற வைத்து அந்த நீரினை குடித்து வரலாம்.

ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு இரண்டு தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்னர் அடுத்த நாள் காலையில் ஓமத்தினை நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைத்து அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.
 
வாயுத் தொல்லை நீங்க நாள்பட்ட வாயுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம். வாயுத் தொல்லை ஒருவருக்கும் ஏற்படுவதற்கு, உண்ணும் உணவுகள் அல்லது உடல் உழைப்பு இல்லாத, பல வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும்.
 
ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.
 
ஓமம் ஒருவரது செரிமான சக்தியை மேம்படுத்தும். பொதுவாக எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உப்புசத்தினால் அவஸ்தைப் படுவோம். அப்போது ஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் சாப்பிடும்போது அதில் உள்ள தைமூள் எனும் பொருளானதுவயிற்று பகுதியில் உள்ள செரிமான திரவத்தின் சுரப்பிற்கு உதவுகிறது. எனவே இது செரிமான செயல்பாட்டினை சீராக்கும்.
 
அசிடிட்டி எனும் நிலை இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தால் ஏற்படுவதாகும். அசிடிட்டி வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும். சில சமயங்களில் நெஞ்சு, தொண்டை போன்ற பகுதிகளும் எரிச்சலுக்கு உள்ளாகும்.
 
சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம்தான். ஒரு டம்ளர் ஓமநீர்.அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருகினால் நெஞ்சு சளி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.