வியாழன், 19 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத பலன்களை அள்ளித்தரும் பருத்திப்பால் !!

தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலைப் பால், கொள்ளுப்பால், பருத்திப்பால் போன்ற அனைத்தும் விதைகளிலிருந்து அரைத்து எடுக்கப்படும் பால் வகையாகும்.

பருத்திப்பால் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலும், வலுவும் கிடைக்கின்றது. 
 
பருத்தி பாலில் வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிக அளவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது.
 
ஒரு சிலருக்கு மாட்டுப்பால் அலர்ஜி இருக்கும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் பருத்திப்பால் தாராளமாக குடிக்கலாம். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது இந்த பருத்திப்பால்.
இந்த பருத்திப்பால் மாதவிடாய் சுழற்சியை சரி செய்கின்றது.

அல்சர் மற்றும் உணவுப்பாதையில் புண்கள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பருத்தி பால் குடித்து வருவதன் மூலமாக புண்கள் குணமாகும்.
 
உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கின்றது பருத்திப்பால் உடலுக்கு வலுவையும் அதிகரிக்கின்றது. பருத்திக் கொட்டை வயிற்றில் இருக்கக்கூடிய உங்களை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
 
வயிறு சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரிபடுத்தினால் கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பிரச்சனை தடுக்கப்படுகிறது.