1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தொடர்ந்து அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் உடல் எடையை குறைக்குமா...?

எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.
 
காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். மேலும் அத்திப்பழத்திலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.
 
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள் : அத்திப்பழம் - கால் கிலோ,  பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு, இஞ்சி - 1 துண்டு, தேன் - 1 டீஸ்பூன், பால் - 1 கப்.
 
செய்முறை : அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த ஜூஸை ஒரு தம்ளரில் ஊற்றி பருகலாம். சூப்பரான சத்தான அத்திப்பழ ஜூஸ் ரெடி.