திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகளை தரும் இந்து உப்பு !!

இந்து உப்பு (பாறை உப்பு) இமாலய மலைப்பகுதியில் இருந்து கனிவான முறையில் வெட்டி எடுத்து பதப்படுத்தப்படுகிறது.


கடல் உப்பு சுத்தமான வெள்ளை நிறத்துல இருக்கும். ஆனால், இந்த இந்து உப்பு பொறுத்த வரைக்கும் வெள்ளை நிறத்தோட, கொஞ்சம் பழுப்பு நிறமும் கலந்த தோற்றத்தில் இருக்கும்.
 
கால்சியம், பொட்டாசியம், சல்பர் மற்றும் புளோரைடு, சோடியம் குளோரைடு அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம்,  மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.
 
நம் அன்றாடம் பயன்படுத்துகிற உப்புக்கும் இந்து உப்பிற்கும் என்ன வித்தியாசம் என்றால் நம்ம சாதாரணமா பயன்படுத்துற உப்பு பித்தத்தை அதிகரித்து, தலை கிறுகிறுப்பு ,பித்த வாந்தி மற்றும் மயக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆனால் இந்துப்பை பொறுத்தவரைக்கும் பித்தத்தை ஏற்படுத்தாது. இது பித்தத்தையும் கபத்தையம் சமன் செய்து, சளி, இருமல் வராமல், தற்காத்துக் கொள்ளும். 
 
அதே போன்று, இந்துப்பு நம்முடைய செரிமான சக்தியை அதிகரிக்கும். கண் பார்வை மற்றும் இதயத்தையும் பாதுகாக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலுக்கு உறுதியை தருவதுடன், மனச்சோர்வு போக்கி, உடலில் நீர்ச்சத்தினை தக்க வைக்க உதவும். இரத்த  சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
 
குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும். நிம்மதியான உறக்கத்தை தருவதுடன், தைராய்டு பிரச்சனைக்கும் இது தீர்வாக அமைகிறது.
 
இந்துப்பை உடல்ல தேய்த்து  சிறிது நேரதிற்கு  பிறகு   குளித்தால்  உடல் அசதி நீங்கி, மனமும், உடலும் புத்துணர்ச்சி பெரும். இந்துப்பு கலந்த இளம் சூடான நீரால்  வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் போன்றவை சரியாகும்.
 
மூலம் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு  இது மருந்தாகப் பயன்படுகிறது.இத்தனை நன்மைகள் இந்த இந்து உப்புல அடங்கி உள்ளது. உப்பு இருக்கும் இடத்தில் எந்தவித கிருமிகளும் அண்டாது.