வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எண்ணெய் பசை மற்றும் வறண்ட சருமத்தை போக்க சில டிப்ஸ்...!

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
 
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து  முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
 
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும். எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு  முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவ வேண்டும். இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய் பசையை போக்கி சிறந்த மாற்றத்தை உடனே கொடுக்கும்.
 
ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த  கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின்  குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். 
 
உங்களால் முடிந்த வரை உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு உபயோகிக்க வேண்டும்.