1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

முகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்...!

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும். தர்பூசணி பழச்சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.
* ஸ்டிராபெர்ரி பழத்தை மெல்லியதாக ஸ்லைஸ் செய்து, கண்களின் மேல் நேரடியாக வைத்துக்கொள்ளவும். இது, கருமையை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.
 
* காட்டனை எடுத்து, அவற்றைக் குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.
 
* ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
* ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.
 
* பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
 
* ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும்.  கண்கள்  குளிர்ச்சியாக இருக்கும்.