1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் நன்மைகளும் !!

பலாபழத்தை, அதன் சீசனின்போது சாப்பிடுவது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதோடு, அதில் உள்ள சத்துக்களால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளையும்  தவிர்க்கலாம். 

பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக  உண்ணலாம்.
 
பலாப்பழத்தில் நல்ல அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத்  தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியானது கிடைக்கும்.
 
கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.
 
பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. நார்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் A, B, C, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
 
பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரிசெய்யும்.
 
பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும்.