1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (23:37 IST)

கொத்தமல்லி தேநீரின் நன்மைகள்

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையைப் போட்டு சுக்கு ஒரு தேக்கரண்டி சுவைக்கு வெல்லம்  போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை சூடாகப் பருகவும். 
 
வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை போக்கக் கூடியது. சிறுநீர்ப்பிரச்சினைக்கும் இது நல்ல மருந்தாக அமைகின்றது. குடற் புண்களை ஆற்றக்கூடியது. பசியின்மையை போக்கக் கூடியது. பித்த நிலையை சமப்படுத்தக் கூடியது.
 
கொத்தமல்லி விதையையும் சுக்கையும் நீரில் போட்டு கொதிக்க விடவும். சுவைக்கு சீனி சேர்த்து பருகலாம். பால் சேர்த்தால் திரிந்து விடும். சிறுநீர் வெளியேறாத  போது கைகளில் வீக்கம் கால்களில் வீக்கம் ஏற்படும் போது சிறுநீரை வெளியேற்றக்கூடியது. 
 
ஏப்பம் அடிக்கடி வருபவர்களுக்கு கொத்தமல்லி ஒரு அருமருந்தாகின்றது. உற்சாகத்தை தரக் கூடியது. கருவுற்ற பெண்களிற்கு கொத்தமல்லியுடன் பெருஞ்சீரகம்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பனைவெல்லம் சேர்த்து கொடுத்தால் கை கால்களில் வீக்கம், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உடலில் ஏற்படுகின்ற நீரேற்றம்  என்பவை குறையக் கூடிய நிலை ஏற்படும். 
 
இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர் எரிச்சல் இரண்டிற்கும் பனைவெல்லத்துடன் கூடிய தேநீர் சிறந்தது. இரத்தம் கலந்து வருவது நின்று விடும். கொத்தமல்லியை பொடியாக்கி பன்னீருடன் கலந்து பூசும் போது முகச்சுருக்கம் போகும். 
 
கொத்தமல்லி சுக்கு காப்பி செய்ய:
 
ஒரு பாத்திமொன்றை அடுப்பில் வைத்து அதில் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்றாக வறுக்கவும். கருக விடக்கூடாது. பொன்னிறமாக வரும். கைகளினால் அழுத்திப் பார்த்தால் வறுத்த விதை உடையும். அது தான் பதம். பின்பு சுக்கையும் தனியாக வறுத்து எடுக்கவும். மிளகு, சீரகமும் வறுத்துப் போடவும். எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து, தேநீர் செய்து குடிக்கலாம்.