கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் !!
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து, சரியான அளவில் சாப்பிடுவதற்கு உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து LDL என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால், நீரிழிவை நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.