பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்தாகும் குப்பைமேனி மூலிகை !!
தலைவலி, ஒற்றை தலைவலி, சைனஸ் தலைவலி இவற்றிற்கெல்லாம் சிறந்த வலி நிவராணியாக உள்ளது. தலைவலியால் அவதிபடுபவர்கள் குப்பை மேனியின் இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி சரியாகிவிடும். ஒற்றை தலைவலி மனிதனை படாய்படுத்தி விடும்.
ஒற்றை தலைவலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலை சாற்றினை நல்லெண்ணெய்யுடன் கலந்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
குப்பைமேனி இலை வயிற்று தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணமாக்கிடவல்லது. வயிற்று பூச்சிகளான கொக்கி புழு, நாடாப்புழு இதனை அழித்து, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமளிக்கிறது.
குப்பை மேனியின் இலைகளை அரைத்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு சேர்த்து பற்று போட, தொண்டைவலி, தொண்டை கட்டுதல், தொண்டை அழற்சி, வீக்கம் இவற்றிற்கெல்லாம் சிறந்த மருந்தாய் அமைகிறது.
காதுவலிக்கும், காது அடைப்பிற்க்கும் குப்பை மேனி கீரையின் இலைகள் சிறந்த மருந்ததாக பயன்படுகிறது. காது அடைப்பிற்கு குப்பைமேனி இலைகளுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து காதினை சுற்றி, பற்று போல போட குணமடையும்.
உடலில் ஏற்படும் பித்தத்தை குறைக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்கள், தீப் புண், வாத நோய்கள், வயிற்றுவலி, தாவர வகை நஞ்சுகள், மூலம், நமைச்சல், போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது. மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்து.