ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (18:26 IST)

சிறுநீர் தாரை தொடர்பான நோய்களை குணமாக்கும் நித்திய கல்யாணி !!

Nithyakalyani
நித்தியகல்யாணி செடி நம் சுற்றுச்சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை தனக்குள்ளே உட்கிரகித்துக் கொண்டு, 100 சதவீதம் ஆக்சிஜனை நமக்கு தருகிறது. ஆகவே இதனை தாராளமாக நம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.


நித்திய கல்யாணியின் பூக்களை தேவையான அளவு தண்ணீரில் போட்டு காய்ச்சி கால் பங்கு அளவிற்கு வற்றி வரும் பொழுது அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு 4 வேளை வீதம் எடுத்து வந்தால், அதிக தாகம், அதிக சிறுநீர்ப் போக்கு, அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும்.

நித்தியகல்யாணி பூக்களை கஷாயம் செய்து தினமும் நான்கு வேளைகள் 25 மில்லி அளவு எடுத்து வர நோய் விரைவில் குணமாகும். நித்திய கல்யாணி வேரை, காய வைத்து பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வர சிறுநீர் தாரை தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமடையும்.

உடல் அசதி குணமாக நித்யகல்யாணி பூக்களை தண்ணீரில் இட்டு, பாதியாக சுண்ட காய்ச்சி குடித்து வரலாம். நித்தியகல்யாணி வேருடன், மிளகு சீரகம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தேநீராக்கி பருகுவதால், பல் வலி, உடல் வலி ஆகியன நீங்கும்.

நித்திய கல்யாணி பூக்கள், இலைகள்,  மாதுளை தோல் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு அதனை, அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட அதிக இரத்தப் போக்குடன் கூடிய மாதவிலக்கு குணமாகும்.