1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (18:57 IST)

சத்துக்கள் நிறைந்து காணப்படும் கீரை வகைகளும் அதன் பலன்களும் !!

அகத்திக்கீரை: அகத்திக்கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும் , சீறுநீர் தடையின்றி போகும், கண்கள் குளிர்ச்சி பெறும்.       


அரைக் கீரை: ஆண்மை குறைவு உள்ளவர்கள் அரைக்கீரையை தினசரி சாப்பிட இழந்த ஆண்மையை பெற முடியும்.

முருங்கை கீரை:  ஆண்மை விருத்திக்கு இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் விருத்தியாகும். இரும்பு சத்து அதிகம் காணப்படுவதால் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

முளைக்கீரை: அஜீரணம் , மலச்சிக்கல் , குடல்புண் உள்ளவர்கள் முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் குணமாகும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும் பலன் தரும்.

சிறு கீரை: சிறுநீரகத்தில் உண்டாகும் நோய்களை குணமாக்குவதில் சிறுகீரை முக்கியத்துவம் பெறுகிறது.நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுபவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் வீரிய மிக்க மருந்துகளையும் தன்மையை முறித்துவிடும்.

மணத்தக்காளி கீரை: வாய்ப்புண் , குடற்புண் குணமாகும் , மூல சூட்டையும் தணிக்கும், ஆசன கடுப்பு , நீர் கடுப்பு முதலிய நோய்கள் நீங்கும்.

பொன்னாங்கண்ணிக்கீரை: வைட்டமின் A சத்து , புரதம் , இரும்பு சத்து அதிகம் காணப்படுவதால் நொய்யெதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. கண்ணனுக்கு ரொம்ப நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரை: பசும்பாலை காய்ச்சி அதில் இந்த கீரையை கரைத்து வெறும்வயிற்றில் குடித்துவர 15 நாட்களில் காமாலை நோய் அகன்றுவிடும்.