1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (17:01 IST)

மகாலட்சுமி நம்முடைய வீடுகளில் தங்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்...?

மகாலட்சுமி நம்முடைய வீடுகளில் தங்க வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும். எவ்வாறான தவறுகள் மகாலட்சுமி வரவை நம்முடைய வீடுகளில் தடுப்பாக அமைந்துள்ளன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


பொதுவாக நம்முடைய வீடுகளில் விசேஷம் என்று வீட்டிற்கு வருபவர்களுக்கு பாகற்காயை தவிர்த்து மற்ற காய்கறி வகைகளை உணவாக படைப்பது வழக்கமான ஒன்று. ஏனெனில் பாகற்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும் கசப்பு தன்மை இருப்பதால் அவற்றை விருந்தினர்களுக்கு விருந்து அளிப்பதன் மூலம் உறவு அறுந்து போகும் நிலை வரலாம் என்பது பொதுவாக எல்லோரிடத்திலும் காணப்படும் நம்பிக்கை.

இனிப்பான சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும் பொழுது கசப்பான பாகற்காயை நீக்குவது லட்சுமி கடாட்சத்தை உண்டாகும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் தவிர்ப்பதால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி நிரந்தரமாக எப்போதும் இருப்பாள். பூஜைக்கு சேர்க்கப்படும் இனிப்பு வகைகளில் உப்பு சேர்த்து சமைக்கக் கூடாது என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

பொதுவாக நமது வீட்டில் விசேஷ நாட்கள் என்று சில நாட்கள் காணப்படும். அதே வேளையில் தெய்வ வழிபாட்டுக்குரிய பொதுவான நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்யும் அன்றைய நாளில் எந்த காரணம் கொண்டும் வெண்ணய்யை உருக்க கூடாது..

பால், தயிர், வெண்ணய் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் வெண்ணெய்யை உருக்கினால் அதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது.

ஆகவே பூஜை செய்கின்ற நாட்களில், குறிப்பிட்ட இறை வழிபாட்டிற்குரிய நாட்களில் வெண்ணய்யை உருக்கி விடாதீர்கள். ஆனால் அந்த நாட்களில் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது மகாலட்சுமி கடாட்சத்தை இன்னும் கூடுதலாக பெருக்க வகை செய்யும்.