1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (15:23 IST)

நார்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படும் அத்திப்பழம் !!

கால்சியம் நிறைந்த உலர் அத்திப்பழங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.


உலர் அத்திப்பழத்தில் கலோரியும், கொழுப்பும் குறைவாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றும்போது சத்துக்களையும் இழக்க நேரிடும். ஆனால சத்துக்களையும் இழக்காமல் உடல் எடையையும் குரைக்க அத்திப்பழம் மிகச்சிறந்ததாகும்.

அத்தி இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காற்றுபுகாத டப்பாவில் வைத்து, தேனில் அரை டீஸ்பூன் அத்திப்பொடியை குழைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் அண்டவே அண்டாது.

அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும். அதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அத்திப்பழம் சிறந்த மருந்தாக இருக்கும்.

வாய்ப்புண், ஈறு வீக்கம் தொடர்ந்து இருந்தால் அத்தி இலைகளை நீரில் கொதிக்கவிட்டு வாய் கொப்புளித்தால் நிவாரணம் பெறலாம்.

ஒரு டம்ளர் நீரில் உலர் அத்திப்பழம் மூன்றைப் போட்டு மறுநாள் காலையில் அத்திப்பழத்தை மென்று சாப்பிடலாம். வெறும் வயிற்றில் உலர்ந்த அல்லது பழுத்த அத்திப் பழங்களை 2, 3 என தினமும் சாப்பிட்ட் வர மலச்சிக்கல் சரியாகும்.

தினசரி நார்சத்துத் தேவையில் 6 சதவிகிதம் இதில் இருந்து கிடைக்கும். பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

மெனோபாஸைக் கடந்த பெண்களுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு நல்லது.

தினமும் மூன்று நான்கு அத்தி சாப்பிட்டுவந்தால், உடல் பொலிவுப்பெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். கெரோட்டினாய்டு உள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும். மேலும் தினமும் இரண்டு மூன்று அத்தியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.