1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தலைமுடி உதிர்வு பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு !!

எலுமிச்சையை தயிருடன் கலந்து தலையில் நன்றாக தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு சீயக்காய் தேய்த்து தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு தலை முடி உதிர்வும் நிற்கும். 

ஆலிவ் ஆயில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் அதற்கு சமமாக ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு அதனுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து பசை போன்று தயாரித்து, அக்கலவையை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரும். 
 
கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து வந்தால் முடிக்கு மிகவும் நல்லது. ஆலோ வேரா இலையை இரண்டாக வெட்டி தலையில் தேய்த்து சில மணி நேரத்திற்கு பிறகு தலையை தண்ணீரில் கழுவ வேண்டும். 

ஒரு கப் கடுகு எண்ணெய்யையில் நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளை போட்டு அந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக்கொண்டு தங்களின் தலையில் தேய்த்து கொள்வார்கள். இது அவர்களின் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. 
 
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.