புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

மூச்சுப்பயிற்சி செய்வதால் இத்தனை அற்புத நன்மைகளா...!!

மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும்.
 
தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.
 
பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும் பயன்படுகிறது.
 
நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.
 
உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.
 
மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
 
மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல் பெருகும்.
 
பிராணாயாமத்தை முறையாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் வளமையடையும். ஊளைச்சதை கரைந்து விடும். 
 
தேவைக்கு அதிகமான கொழுப்புச் சத்துக் குறையும். கண்கள் பிரகாசமடையும். வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியவை மறைந்துவிடும். உடல் உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். சிந்திக்கும் திறன் பெருகும்.