செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்துமா...?

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்தால், எண்ணெய் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற எண்ணம் தான் காரணம். 

நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.
 
பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.
 
தொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
தொடர்ந்து நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
 
நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும் போது வெளிவரும் புகையானது, கல்லீரல் மற்றும் கணையத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.