ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பொடுகு பிரச்சனைக்கு எளிதில் நிவாரணம் தரும் குறிப்புகள் !!

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்.
 

தேங்காய் எண்ணெய்: எலுமிச்சை சாறுடன் சுட வைத்த தேங்காய் எண்ணெய்யை கலந்து தலையில் தடவலாம்.
 
வேப்ப எண்ணெய்: தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.
 
வெங்காய சாறு: ஃபங்கஸ் கிருமிகளை அழிக்க வெங்காய சாறு பயன்படும். இருப்பினும், வெங்காய சாறு முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடும்.
 
எலுமிச்சை புல் எண்ணெய்: ஆங்கிலத்தில் லெமன் கிராஸ் ஆயில் என அழைக்கப்படும் எலுமிச்சை சாறு எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவினால், பொடுகு நீங்கும்.
 
சமையல் சோடா: சமையல் சோடாவை பேஸ்ட் போல கறைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இருப்பினும், அதிகமாக இதனை பயன்படுத்தினால் தோல் வறண்டு விடும்.
 
நெல்லிக்காய்: தெல்லிக்காய் சாறை தலையில் தடவலாம், அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்தலாம். முட்டையின் மஞ்சள் கரு: முட்டையின் மஞ்சள் கருவை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.
 
கற்றாழை: கற்றாழை கூழை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும். பூண்டு பேஸ்ட்: பூண்டு பேஸ்ட்டை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.
 
வெந்தயம்: இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தலையில் தடவலாம்.