பொடுகு பிரச்சனைக்கு நிவாரணம் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

Dandruff Problem
Sasikala|
பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு.
 
பொடு
கு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது.
 
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு,  கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சுத்தமாகும்.
 
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி  சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.
 
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்தியகல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து  தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய  மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
 
சாம்பார் வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை மறையும்.
 
வாரம் ஒரு முறையாவது நல்லண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.


இதில் மேலும் படிக்கவும் :