வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களுக்கு தீர்வு தரும் புதினா..!!

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. 
புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். புதினா கீரையில் நீர்ச்சத்து புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
 
ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். 
 
இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
 
பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது. புதினா கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மகச்சிக்கலும் நீங்கும்.
 
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.