வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:02 IST)

மழைக்காலத்திற்கு ஏற்ற காரசாரமான நண்டு குழம்பு செய்வது எப்படி!

நண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: 
 
 
பெரிய நண்டு: 5
மிளகாய் வற்றல்-8
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 6
உப்பு- தேவையானது
மல்லி - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி 
தேங்காய் சீவல்- 2 
 
செய்முறை: 
 
பெரிய நண்டு 6 எடுத்துக்கொண்டு நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதில் மிளகாய் வற்றல், மல்லி, சீரகம், கடுகு, வெங்காயம், தேங்காய் `அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 
 
இதை நண்டுகளுடன் சேர்த்துக்கொள்ளவும். மேலும், உப்பு, மஞ்சள், தூள் போட்டு பிறட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிவக்க பொரித்தெடுக்கவும். இப்போது சுடச்சுட நண்டு குழம்பு ரெடி.